தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா.. சென்னையில் 324 பேர் பாதிப்பு... வெளியூர் போனா அலேக்காக தூக்குறாங்க...

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் தாறுமாறாக எகிறிக் கொண்டு இருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளிடம் இருந்து பரவிய கொரோனா கடந்த இரண்டு நாட்களில் 1000 ஐ கடந்த நிலையில், இன்று மட்டும் தமிழகத்தில்771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 


இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது.


சென்னைக்கு அடுத்தபடியாக  அரியலூர் மாவட்டத்தில் 188 பேருக்கு கொரோனா தொற்ரு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மதுரை, கிருஷ்ணகிரியில் தலா 20 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. 


கடலூர் மாவட்டத்தில் 95 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரத்தில் 45 பேருக்கு இன்று பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது.


இதுவரை சென்னையில் மட்டும் 2128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இது மொத்த தமிழ்நாட்டின் எண்ணிக்கையில் 40 சதவீதத்துக்கும் மேலானது ஆகும். 


இன்று புதிதாக இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் 35 பேர் தமிழ்நாட்டில் இறந்துள்ளனர். 


 


லாக் டவுன் தளர்வு செய்யப்பட்டு, நாளை டாஸ்மாக் கடைகளும் திறக்க உள்ள நிலையில், இப்படி கொரோனா பரவல் தாறுமாறாக எகிறுவது குறிப்பிடத்தக்கது. 


தமிழகத்தில் லாக் டவுன் தளர்வுகள் செய்யப்பட்டுள்ள போதும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களையும், வேறு ஊர்களுக்கு பயணிப்போரையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துகிறார்கள்.


இ-பாஸ் பெற்று விட்டு மாவட்டங்கள் மாறி பயணம் செய்தாலும், தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்த பின் முடிவு வந்த பின்னரே வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையிலும் வீட்டிலேயே ஸ்டிக்கர் ஒட்டி 14 நாட்களுக்கு குவாரண்டைன் செய்யப்படுவார்கள் எனவும் பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.


பரிசோதனை எண்ணிக்கை அதிகமாவதால் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகிறது. என்றும், கோயம்பேடு தொடர்பில் உள்ளவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்த பின்னர் இந்த எண்ணிக்கை குறையும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


தமிழகத்தில் மட்டும் இன்று 13,413 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 1,78,472 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. 


தமிழகம் முழுவதும் 3,381 பேர் ஐசோலேசன் வார்டுகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.


1,576 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், இன்னும், 3,275 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்


--------------------------------------------------------------------


 


தமிழ் அஞ்சல் நாளிதழுக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள்


tamilanjal2014@gmail.com என்ற மெயிலில் செய்திகளை அனுப்பலாம்.