கிராம நிர்வாக அலுவலர் கத்தியால் வெட்ட முயன்ற வாலிபர்

திட்டக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் கத்தியால் வெட்ட முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சிறுமுளை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரை கத்தியால் வெட்ட முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில்  வருவாய்த்துறையினர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களை தொழுதூர் தனியார் கல்லூரியில் வைத்து உமிழ்நீர் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. 

 

இதில் 46 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட து தெரியவந்தது. இந்நிலையில் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்த மகுடி என்பவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த வீட்டில் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற அட்டையை ஒட்டிவிட்டு வீட்டிலிருந்த மகுடி மகன் சென்னா ரெட்டி /எ/ முருகன் 23 என்ற வாலிபரிடம் விசாரணை செய்துள்ளார். 

 


 

அப்போது ஆத்திரமடைந்த முருகன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்துவந்து கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரை கத்தியால் குத்த முயன்றுள்ளார். சற்று நேரத்தில் சுதாரித்துக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓடினார். 

 

தகவலின்பேரில் திட்டக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன், தாசில்தார் செந்தில்வேல், சமூக நல தாசில்தார் ரவிச்சந்திரன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.

 

இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சென்னா ரெட்டி என்கின்ற முருகனை வலைவீசி தேடி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்ட கிராம நிர்வாக அலுவலரை கத்தியால் குத்த முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Previous Post Next Post