சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு படம் வரைதல் போட்டி; சான்றிதழ்களை பவானி டி.எஸ்.பி சேகர் வழங்கினார் 

 

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் மேற்பார்வையில் கொரோனா சமயத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு படங்கள் வரைந்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. 

 

அதன்மூலம் தனிமையில் இருப்பது பற்றிய அவசியத்தை மக்களிடையே வலியுறுத்தப் பட்டது.

 

இதில் கலந்து கொண்ட  சிறுவர் சிறுமிகளிடம் போட்டியில் கலந்து கொண்டதற்கான பாராட்டுச் சான்றிதழை ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் கையொப்பமிட்டு சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையம் மூலம் நேரடியாக பங்கு பெற்றவர்களிடம் கொடுக்கப்பட்டது.

 

இதற்காக பவானி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சேகர் அவர்கள் இதில் பங்கு பெற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சான்றிதழ் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தார். 

 

குற்றம் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக கேமரா பொருத்துவதில் அவசியத்தையும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.