பழனி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு மோடி கிட் திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்கள்


பழனி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தனியார் மண்டபத்தில் மோடி கிட் திட்டத்தின்கீழ் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

 

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

 

பழனி பகுதியில் பலதரப்பட்ட மக்கள் தினக் கூலி வேலைக்கு  சென்று வாழ்க்கையை நடத்துபவர்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் அவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

 


 

வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலைமை அறிந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக  10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருள், காய்கறி, ஆகிய பொருட்கள் அடங்கிய கிட்டை திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் தூய்மைப் பணியாளர்களும், பொதுமக்களுக்கும், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்நிகழ்வில்  சிறப்பு அழைப்பாளர்களாக வட்டாட்சியர் பழனிச்சாமி பழனி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் RSS மதுரை கோட்ட தலைவர் ராமகிருஷ்ணன், பா.ஜ.க தேசிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி, பா.ஜ.க நகர தலைவர் ராமச்சந்திரன்  மாவட்ட பொது செயலாளர் செந்தில் குமார் மற்றும் ஆகியோர்  கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி சிறப்பித்தனர்