கல்லூர் ஊராட்சியில் எம்.எல்.ஏ கணேசன் கிருமிநாசினி தெளித்தார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ள கல்லூர் கிராமத்தில் கடலூர்  மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.வெ கணேசன் வாகனம் மூலம் நவின ஸ்பிரேயர் கொண்டு கிருமிநாசினி மருந்து தெளித்தார்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கல்லூர் கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த வாரம் மார்க்கெட் மூடப்பட்டதால் தங்களது கூலி தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தனர். அப்படி வந்தவர்களை தனிமைபடுத்தி பரிசோதனை செய்து அங்குள்ள பள்ளியில் தங்கவைத்துள்ளனர்.

 

இந்நிலையில் கல்லூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க திமுக. ஒன்றிய இளைரணி அமைப்பாளரும் கவுண்சிலருமான கே.என்.டி சங்கர் தலைமையில் திட்டக்குடி சட்டமண்ற உறுப்பினர் சி.வெ கணேசன் வாகனம் மூலம் நவீண ஸ்பிரேயர் கொண்டு கிராம பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்தார்.

 

பின்னர் தனிமைபடுத்தப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறி உணவு பொருட்கள் வழங்கி பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கும்பிட்டு கேட்டுக்கொண்டார். இதில் திமுக கிளை செயலாளர் குண்டுகொளஞ்சி துணைதலைவர் ஜானகிராமன் ஊராட்சி செயலர் சுப்ரமணியன் கிராம உதவியாளர் பாலபாரதி ஒன்றிய பாசறை  இளைஞரனி செயலாளர் ஜே.டி அஜித்குமார்  ஆகியோர் உடனிருந்தனர்.