தாறுமாறாக பரவும் கொரோனா.. மே மாதமும் லாக் டவுன் தான்.. எப்பத்தான் சார் முடிவுக்கு வரும்... புலம்பும் ஏழை மக்கள்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.


இந்த ஊரடங்கு ஏப்ரல் 15 ஆம் தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டு மே-3 வரை அறிவிக்கப்பட்டு இருந்தது. மேமாதம் துவங்கி விட்ட நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.


கொரோனா பரவல் அதிகரித்து வந்த வேளையில், மேலும் ஊரடங்கை இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஊரடங்கு இரண்டு கட்டங்கள் இருந்த நிலையில், தற்போது மூன்றாவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.



இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 203 உயர்ந்துள்ளது. இதன்மூலம் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை2,526 ஆகி உள்ளது. இதில் இதுவரை 1312 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 


இன்னும் 1,216 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


சென்னையை பொறுத்தவரை கொரோனா அதிதீவிரமான பரவி வருவதால், கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. 


அதே நேரம் ஏழை எளிய மக்கள் ஊரடங்கு முடிந்து எப்போது இயல்பு நிலைக்கு திரும்புவோம் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


மே மாதம் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தால் மட்டுமே ஊரடங்கு நீக்கப்படும் அதுவரை இந்த நிலையே தொடரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


 


Previous Post Next Post