1982 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 40,698 ஆனது...18 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1,982 பேருக்கு கோரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்  தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 698 ஆக உயர்ந்தது உள்ளது.


தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 367 ஆக உள்ளது.


இன்று மட்டும் 16,889 பேருக்கு செய்த பரிசோதனையில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது. மொத்தமாக இதுவரை 6,42,201 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.


இன்றைய நிலையில் 18,281 பேர் சிகிச்சையில் உள்ளனர். 22,047 குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டனர்.