திமுக சார்பாக மின்கட்டண உயர்வை குறித்து தனிமனித இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மின்கட்டண உயர்வை குறித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை 35வது கோட்டத்திற்குட்பட்ட நம்பர் 2 பிள்ளையார் கோவில் தெருவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மின் கட்டண உயர்வை கண்டித்து சேலம் பொன்னம்மாப்பேட்டை திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் விஜயன் அவர்களின் தலைமையில் கார்த்தி கண்ணன் கௌதம்  சாமியார்ஜெகநாதன்  பவா நாராயணன்ஆகியோர்  கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்  தனிமனித இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து நடைபெற்றது.


கொரோனோ வைரஸ் நோய் காரணமாக அந்தந்த பகுதிகளில் உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மிகவும் எளிமையான முறையில் அதிக கூட்டம் சேர்க்காமல் குறைந்த தொண்டர்களுடன் நடைபெற்றது.