பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடக்கக்கூடிய கல்லூரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் -நிர்வாகம் அறிவிப்பு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடக்கக்கூடிய கல்லூரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் நிர்வாகம் அறிவிப்பு.

 


 

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இந்து அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக பழனி நகர மற்றும் புறநகர கிராம பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி மற்றும் மகளிருக்கான பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் பயிலும் விதமாக பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி போன்றவைகள் நிறுவப்பட்டு  தேவஸ்தான நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.ஆண்கள் கலைக்கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துடனும் பெண்கள் கலைக்கல்லூரி அன்னை தெரசா பல்கலைக்கழகதுடனும் தொழில்நுட்ப கல்லூரி அண்ணா பல்கலைக் கழகத்துடனும் இணைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 2020- 21 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. கொரோனோ தொற்று காலம் என்பதால் கல்லூரியில் விண்ணப்பங்கள் கொடுக்கும் நிலை இயலாத காரணத்தினால் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கும் வசதியினை நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் விண்ணப்பிப்பதற்கு www.apcac.edu.in  என்ற இணையதள முகவரியையும் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் www.apacwomen.ac.in என்ற முகவரியும் 

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் விண்ணப்பிப்பதற்கு www.palaniandavarpc.org.in என்ற இணையதள முகவரியையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.

மேலும் கல்லூரி விண்ணப்பங்கள் 21/7/ 2020 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் செயல் அலுவலர்  ஜெயச்சந்திர பானு ரெட்டியும் திருக்கோயில் உதவி ஆணையர் செந்தில்குமாரும் தெரிவித்துள்ளனர். மேலும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தினால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் மிக குறைந்த கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கல்லூரியில் பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள் இக் கல்லூரியில் பயின்று நல்ல ஒரு நிலைமைக்கு  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...