ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு காளைமாடு சிலை அருகே ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அருந்ததியர் சமூகத்திற்கு வழங்கியுள்ள 3 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சட்டப்படி தனி ஒதுக்கீடு 6 சதவீதத்தை அமுல்படுத்திய அரசாணை வெளியிட வேண்டும். அருந்ததியர் உட்பிரிவுகள் ஒன்றிணைத்து ஆதித்தமிழர் என அறிவிக்க வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகள் இதில் உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் நாகராசன், வீரமணி, கொங்குயுவராஜ், அண்ணா துரை , பஷீர் அஹமத் கான், ஆதி தர்மன், மணி தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.