தென்காசி தெற்கு மாவட்டத்தில் அதிமுக தேர்தல் பணி தொடக்கம்... செப்,1, 3ஆம் தேதிகளில் இளைஞர் பாசறை நிர்வாகிகள் சந்திப்பு





 

தென்காசி தெற்கு மாவட்டத்தில் அதிமுக சார்பில் 2021 தேர்தல் பணிகளை தொடங்கும் விதமாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் செப்,1, 3ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட செயலாளரும், தென்காசி எம்.எல்.ஏ,வுமான சி.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

மாண்புமிகு இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தெய்வீக ஆசியுடன், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி  கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க, 2021 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிடும் வகையில் தென்காசி தெற்கு மாவட்டத்தில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. 

 

இதில் முதற்கட்டமாக தென்காசி மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகளில், பூத் வாரியாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு நிர்வாகிகள் நியமனம், நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வரும் செப். 1 (செவ்வாய்) மற்றும் செப்.3 (வியாழன்) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

 

01-09-2020 அன்று தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியும், 03-09-2020 அன்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சநதிப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

 

அப்போது தென்காசி தெற்கு மாவட்டத்தில்  இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய நிர்வாகிகள் பூத் வாரியாக நியமிப்பதுடன், தேர்தல் பணிகளை சிறப்பாக தொடங்குவது குறித்த ஆலோசனையும் செய்யப்படவுள்ளது.

 

எனவே தென்காசி தெற்கு மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், வார்டு கழக, கிளைக் கழக, நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் பூத் வாரியாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளை தேர்வு செய்து, அதற்கான பட்டியலை உடனடியாக மாவட்ட கழக அலுவலகத்தில் சேர்க்க வேண்டும். 

 

மேலும் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெறவுள்ள இளைஞர் மற்றும் இளம்பெண்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர்களை கலந்து கொள்ள செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

இவ்வாறு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் திரு.சி.செல்வ மோகன் தாஸ் பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


 

 




Previous Post Next Post