திருப்பூர் சுதந்திரதின விழா: ரூ.3.67 கோடி நல உதவி...கொரோனா பணிகளுக்கு பாராட்டு... கலெக்டர் விஜயகார்த்திகேயன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற 74 சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 15 பயனாளிகளுக்கு ரூ. 3.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில் 74 சுதந்திரதினவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஏற்றுக்கொண்டார். பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், பலூன்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து, கொரோனா வைரஸ் (கோவிட்-19) தடுப்பு பணியில் ஈடுபட்ட 272 அரசு அலுவலர்கள், 07 தன்னார்வலர்கள், 70 காவல்துறையினர் என 349 முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.


இன்றைய விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1,12,800/- மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரும், , வருவாய்த் துறையின் சார்பில், மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 பயனாளிகளுக்கு ரூ.2,00,000/- மதிப்பிலான நிவாரண நிதியினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.59,495/- மதிப்பில் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களும், பிற்படுத்தப்பட்டோர், சிறுபாண்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.8,760/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரமும், 1 பயனாளிக்கு ரூ.5,342/- மதிப்பில் விலையில்லா சலவை பெட்டியும், வேளாண்மைத்துறை, மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,34,000/மதிப்பில் வேளாண் உபகரணங்களும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3,36,00,000/- மதிப்பிலான நீட்ஸ் திட்டத்தின் கீழ் கடனுதவியினையும் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர்த்திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.15,00,000/-மதிப்பில் பெருங்கடன் உதவியும் மற்றும் 1 பயனாளிக்கு ரூ.10,44,000/- மதிப்பில் வேளாண் கருவிகள் வாடகை மையத்திற்கான நலத்திட்டம் (டிராக்டர்) என 15 பயனாளிகளுக்கு ரூ.3,67,64,397/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் , இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.இவ்விழாவில், திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் திரு. கார்த்திகேயன், இ.கா.ப. அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷாமித்தல் இ.கா.ப., அவர்கள், திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர்கள் திரு.சுரேஷ்குமார் இ.கா.ப. திரு. செல்வகுமார் இ.கா.பா., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கு.சரவணமூர்த்தி, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) திரு.ஜெ.ரூபன்சங்கர்ராஜ், காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உ.தனியரசு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.சத்தியபாமா, தாராபுரம் சார் ஆட்சியர் திரு. பவன்குமார் இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி. கவிதா (திருப்பூர்), திரு.ரவிக்குமார் (உடுமலைப்பேட்டை), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. சாகுல் ஹமீது, துணை ஆட்சியர்கள், காவல்துறையினர், அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.