மத்திய கூட்டுறவு வங்கி மூலம்  ரூ.5.40 லட்சம் மதிப்பீட்டில் 18 பயனாளிகளுக்கு கறவை மாட்டுக்கடன்


திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சிறப்பு திட்டத்தின்கீழ் திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் சோமசுந்தரம், உதவி இயக்குநர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரது பரிந்துரையின்பேரில் ஆவின் மூலம் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பிரதான கிளையின் சார்பில் பயனாளிகளுக்கு கறவை மாட்டுக்கடன் வழங்கும் விழா நடைபெற்றது.


இந்த விழாவுக்கு அடிஅண்ணாமலை கால்நடை மருந்தக மருத்துவர் டி.சிலம்பரசன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி களமேலாளர் ஏ.கணேசன், முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்த கொண்ட வங்கியின் கிளை மேலாளர் கே.பத்மா 18 பயனாளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் மொத்ததம் ரூ.5.40 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாட்டுக்கடனுதவியினை வழங்கினார். இதில் அரசு அலுவலர்கள் பயனாளிகள் கலந்துகொண்டனர்.