5 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்  மருந்துகள்... கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கினார்


 

தேனி மாவட்டம் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்த நகரம் கம்மவர் தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற, ஆரம்ப சுகாதார துறை நிகழ்ச்சியில் 5 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வைட்டமின் A  மருந்துகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று குழந்தைகளுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில்  கோவிந்தநகரம் சுற்று வட்டாரபகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேரில் சென்று வைட்டமின் மருந்துகளை கொடுத்து பயனடைந்தனர்.