திருப்பூர் மாநகர காவலர் குடியிருப்பு பகுதியில் காவலர் சிறப்பு அங்காடி

திருப்பூர் மாநகர காவலர் குடியிருப்பு பகுதியில் காவலர் சிறப்பு அங்காடி மற்றும் ஆவின் பாலக அங்காடி திறக்கப்பட்டது.



திருப்பூர் மாநகர காவல்துறை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக காவலர் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் 24.08.2020 இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன் இ.கா.ப., அவர்கள் திருப்பூர் மாநகரம் வடக்கு காவல்நிலைய சரகத்தில் உள்ள மாநகர காவலர் குடியிருப்பு பகுதியில், ஆவின் பாலக அங்காடியை திறந்து வைத்தார். திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் திரு.க.சுரேஷ்குமார் அவர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து, திருப்பூர் மாநகரம் மற்றும் திரு.சு.செல்வகுமார் அவர்கள் தலைமையிடம், திருப்பூர் மாநகரம் முன்னிலை வகித்தனர். திரு.யு.வி.ராஜசேகர், பொது மேலாளர், ஆவின் பாலகம், திருப்பூர் மாவட்டம் கலந்து கொண்டார். இந்த காவலர் நல அங்காடியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற பொருட்கள் கொள்முதல் விலைக்கு கிடைக்கும். மேலும் அத்தியாவசிய தேவையான பால் மற்றும் பாலிலிருந்து தயார்செய்யப்படும் பொருட்கள் ஆவின்பாலக அங்காடியில் குறைந்த விலையில் கிடைக்கும்.


இந்த அங்காடியால் காவலர் குடும்பத்தினர் மிகுந்த பயன்பெறுவார்கள். காவல் ஆணையர் அவர்கள் ஆவின் பாலகம் திறந்துவைத்த இந்நிகழ்வின்போது திருப்பூர் மாநகர கூடுதல் காவல் ஆணையர், பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு மற்றும் காவல் உதவி ஆணையர்கள் வடக்கு சரகம், நுண்ணறிவுபிரிவு ஆகியோர் உடனிருந்தனர்.


 


Previous Post Next Post