தமிழ் அஞ்சல் நாளிதழ் சார்பில் 500 மரக்கன்றுகள் நடும் விழா


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாசார் ஊராட்சியில் தமிழ் அஞ்சல் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

 

விழாவிற்கு தமிழ் அஞ்சல் நாளிதழ்  கடலூர் மாவட்ட செய்தியாளர் பாசார் செல்வேந்திரன் தலைமை தாங்கினார்.

 

ஊராட்சி மன்றதலைவர் விஜயாதங்கப்பன் துணைதலைவர் லெட்சுமி கருப்பையா முன்னிலை வகித்தனர்.

 

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தமிழ்செல்வன் ,செயலர் மாயவன் இயற்கை ஆர்வலர் ராமச்சந்திரன்,பாடகர் சுதாகர் வரவேற்றனர்.

 

சிறப்பு அழைப்பாளராக மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ஆர். சங்கர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டுவைத்து பணியினை தொடங்கி வைத்தார் இதில் இலுப்பை, நாவல்,புளியமரம், வெளாம்மரம் உள்ளிட்ட பலன்தரும் 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள் மருதமுத்து எ முத்துமலர், 

சட்டப்பஞ்சாயத்து கோவிந்தசாமி,கழுதூர் ராமர்,ரமேஷ்,செந்தில்,

ராஜராஜசோழன்  தூய்மைபணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.