தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் கபசுர குடிநீர்


 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியையடுத்த மூப்பன்பட்டி மற்றும் ஆவல்நத்தம் கிராம மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர்  வழங்கப்பட்டது.

 


 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மூப்பன்பட்டி மற்றும் ஆவல்நத்தத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலர் அழகர்சாமி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் நிர்மலா முன்னிலை வகித்தார்.

 


 

மூப்பன்பட்டி மற்றும் ஆவல்நத்தம் பகுதி மக்களுக்கு கரோனா தொற்று பரவலை தடுக்க, பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கவும், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிய வலியுறுத்தியும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது. 

 


 

தொடர்ந்து, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை வழங்கினர். இதில், ஒன்றியச் செயலர்கள் சுரேஷ் (கிழக்கு), முருகன் (மேற்கு), மாவட்ட அவைத் தலைவர் கொம்பையா, நகரச் செயலர் பழனி, பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.