பரமன்குறிச்சி கஸ்பா  நேதாஜி கிரிக்கெட் கிளப் சார்பாக வட்டார அளவிளான கிரிக்கெட் போட்டி

பரமன்குறிச்சி கஸ்பா  நேதாஜி கிரிக்கெட் கிளப் சார்பாக கடந்த மூன்று நாட்களாக வட்டார அளவிளான கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது. 

 


 

இதில் முதல் பரிசு பெற்ற கஸ்பா நேதாஜி கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ3000 மற்றும் வெற்றி கோப்பையும் , 2ம் பரிசு பெற்ற காயாமொழி அணிக்கு ரூ2000 மற்றும் வெற்றி கோப்பையும், 3ம் பரிசு பெற்ற அம்மன்புரம் அணிக்கு ரூ1000ம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொருளாளர்   ராமநாதன் சார்பில் பரமன்குறிச்சி திமுக ஊராட்சி செயலாளர் இளங்கோ தலைமையில் வழங்கப்பட்டது.  

 


 

இதில் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், ஒன்றிய இளைஞரணி துனை அமைப்பாளர் மனோஜ், ஒன்றிய மாணவரணி துனை அமைப்பாளர் செந்தில் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.