நீலகிரி கரிகல்வளை ஊர் பொதுமக்களுக்கு அதிமுக சார்பில்  இலவச அத்தியாவசிய பொருட்கள்

 

நீலகிரி மாவட்டம் குந்தா ஒன்றியம் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட கரிகல்வளை ஊர் பொதுமக்களுக்கு அதிமுக சார்பில்  இலவச அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத் தலைமையில் வழங்கினார்.

 

இந்நிகழ்வில் குந்தா ஒன்றிய கழகச் செயலாளர் வசந்தராஜன், உதகை ஒன்றிய கழகச் செயலாளர் டி.பெள்ளி, ஆவின் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் உதகை ஒன்றிய செயலாளர் கடநாடு பா.குமார்,மாவட்ட தொழிற்சங்க பிரிவு செயலாளர் சக்சஸ் சந்திரன்,பாசறை உதகை நகரச் செயலாளர் அக்கீம் பாபு, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் மரகல் சிவகுமார்,இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட குழு தலைவர் குண்டன் கழக நிர்வாகிகள் கல்லக்காெரை சந்திரன்,முருகன், தொண்டர்கள்,ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.