லக்கூர் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 74 ஆவது சுதந்திரதின விழா

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் லக்கூர் ஊராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஆணைக்கிணங்க 74 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

 


 

மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி திட்டக்குடி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அன்பரசு அறிவுறுத்தலின் பெயரில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் லக்கூர் ரமேஷ் கலந்து கொண்டு  கொடி ஏற்றி வைத்து காமராஜர், சுபாஷ் சந்திர போஸ், மற்றும் காங்கிரஸ் கமிட்டி மன்றம் போர்டுகள் திறந்துவைத்து பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் எழுதுகோல் மற்றும் பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் செல்லமுத்து மணிகண்டன் அஜித் சாருகான் ஆனந்த் முத்து ராபின் பரமசிவம் வசந்த் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.