திருநெல்வேலி சுத்தமல்லி விலக்கில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


சிவனடியார் சரவணன் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் சார்பில் தென் மண்டல செயலாளர் ராஜபாண்டி தலைமையில் திருநெல்வேலி சுத்தமல்லி விலக்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் உடையார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.