அரங்கூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ள அரங்கூர் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ஆர் சங்கர் ஆணைக்கிணங்க  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

ஊராட்சிமன்றதலைவர் ராஜா கொடியசைத்து துவக்கிவைத்தார் இதில் தூய்மை பணியாளர்கள் ஊராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டது.

 

இதில் துணைதலைவர் செல்வம், செயலர் செல்வராஜ்,அங்கன்வாடி பொருப்பாளர் ராசாத்தி, மகளிர் சுயஉதவி குழு கணக்காளர் அஞ்சலம்,வார்டு உறுப்பினர்கள் கீதா,ஜனதா,ரூபாவதி,இளவரசி,பூங்கொடி,கவிதா,அமுதா,அர்ச்சுணன்,தூய்மை பணியாளர்கள்,பணிதள பொருப்பாளர்கள்,இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.