திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியம் செந்துறை பகுதிகளில் 3 -ஊராட்சிகளில் முழு ஊரடங்கு
செந்துறை பகுதிகளில் 3 -ஊராட்சிகளில் முழு ஊரடங்கு. வர்த்தக சங்கம் மற்றும் ஊர்பொதுமக்கள் நடத்திய கூட்டத்தில் முடிவு

 


 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம ஒன்றியம் செந்துறை,குடகிப்பட்டி,பிள்ளையார்நத்தம் ஆகிய ஊராட்சி கிராமங்களில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இதையொட்டி முழு ஊரடங்கு ஏற்படுத்துவதற்கு  செந்துறை ஊராட்சியில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமையில் நடந்தது. முன்னதாக கூட்டத்தில் சமூக  இடைவெளியை பின்பற்றியும்,முககவசம் அணிந்து கலந்து கொண்டனர். இதில் தாசில்தார் இராதகிருஷ்ணன்ன, வட்டார மருத்துவ  அலுவலர் சேக்அப்துல்லா,    செந்துறை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சஞ்சய்ராம், ஆணையாளர்கள் ரவீந்திரன், தட்சாணமூர்த்தி,நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் தற்போது ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளில் தமிழக அரசு முழு ஊரடங்கு அமலில் உள்ளது.கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு ஏற்படுத்துவற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி செந்துறை,பிள்ளையார்நத்தம்,குடகிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கடைகளை காலையிலிருந்து இரவு வரை வருகின்ற 11-ந்தேதி செவ்வாய்க்கிழமை முதல் 20-ந்தேதி வியாழக்கிழமை முடிய முழு கடையடைப்பு  முழு ஊரடங்கு கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு செந்துறை, பிள்ளையார்நத்தம், குடகிப்பட்டி வர்த்தகர்களும் ,கிராமப்புற காரர்களும்,காய்கறிவியாபாரிகளும் ,இறைச்சிக்கடைகாரர்களும் ,சலூன் கடைகாரர்களும்  அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.  அதன்படி இந்த கூட்டத்தில் வர்த்தக சங்கத்தலைவர் டிஎஸ்.சேகர் மற்றும் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் அரசு அதிகாரிகள்,ஊர்பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.