ஈரோடு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பிரச்சார கொள்கை பரப்புரை பிரிவின் நிர்வாகிகள் கூட்டம்


ஈரோடு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி (பிரச்சார ) கொள்கை பரப்புரை பிரிவின் நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் ஆர். வெங்கடேஷ் பாபு  தலைமையில்

நம்பியூர் வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

 

விழாவிற்கு கொள்கை பரப்புரை பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ஜீ.பி.ரங்கராஜ், மாவட்டச் செயலாளர்கள் ராஜா ,ஈஸ்வரன், நடராஜ், சித்ரா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்திற்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவிற்கு மாநில கொள்கை பரப்புரை செயலாளர் ஏ.பி.எஸ்.பற்குணன், புதிய நிர்வாகிகளுக்கு கட்சியினுடைய கொள்கைகளை எடுத்துரைக்க சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். விழாவின் முடிவில் மாவட்ட கொள்கை பரப்புரை செயலாளர் கே.செல்வராஜ் நன்றி உரை கூறினர்.