தே.மு.தி.கதலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சிறப்பு ஆயுள் ஹோமம்... மாவட்ட துணை செயலாளர் வாசுதேவன் இல்லத்தில் நடைபெற்றது


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழா ஈரோடு புறநகர் மாவட்டம் முழுவதும் கட்சி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என அனைவரும் சிறப்பாக கொண்டாடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும். கழகத்தின் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி வருகின்றனர்,


அதன் ஒரு பகுதியாக கோபி அடுத்த நம்பியூர் பகுதியில் உள்ள மாவட்ட துணை செயலாளர் வாசுதேவன் இல்லத்தில் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சிறப்பு ஆயுள் ஹோமம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் சுப்பிரமணி ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.