துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப்பின் சீறிய முயற்சியில் தேனி மாவட்டங்களில் தூர்வாரப்படும் கம்மாய்கள்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இளைய மகன் ஜெயபிரதீப் அவர்களின் சிறிய முயற்சியில் தேனி மாவட்டங்களில் தூர்வாரப்படும் கம்மாய்கள். 

 


 

தேனி மாவட்டங்களில் உள்ள குளங்கள் கண்மாய்கள் பல காலமாக தூர்வாரப்படாத நிலையில் மலை காலங்களில் அதிகளவு தண்ணீர் சேகரிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுவதை அறிந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இளைய மகன் ஜெயபிரதீப் அவர்கள் கம்மாய்கள் தூர் வாருவதற்கு ஒரு சிறந்த திட்டம் ஏற்படுத்தி கம்மாய் களை சீரமைக்கும் பணியினை ஏற்பாடு செய்தார்.

 

அத்திட்டத்தின் படி கண்மாய்களில் வரத்து வாய்க்கால் நீர் வடியும் வாய்க்கால் கம்மாய் மதகுகளை சீர் செய்தல் கம்மாய் கரைகளை பலப்படுத்துதல் தூர்வாரும் மணல்களை விவசாய நிலங்களுக்கு இலவசமாக வழங்குதல் போன்ற பணிகள் இடம்பெற்றன.

 

கடந்த காலங்களில் போடி தேவாரம் பகுதிகளில் 9 கண்மாய்கள் இவரின் முயற்சியால் முறையாக சீரமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை போன்று  தற்போது பெரியகுளம் பகுதியில் உள்ள 12 கண்மாய்கள்  ஆஇ அதிமுக கழகத் தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்போடு கண்மாய்களில் சீரமைக்கும் பணியினை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார்.

 

விவசாய நலன் கருதி ஜெயபிரதீப் அவர்களின் இந்த கம்மாய் சீரமைக்கும் திட்டம் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தற்போது தேனி மாவட்டத்தில் ஜெயபிரதீப் அவர்களுக்கும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

 

 

Previous Post Next Post