நெல்லை சந்திப்பு பாலர் பள்ளியில் சுதந்திர தின விழா... பரணி சங்கரலிங்கம் பங்கேற்பு 

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள நெல்லை பால்வாடிபள்ளியில் 74 வது சுதந்திர தின விழா சமூக இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் ரீனா துரை வரவேற்புரை ஆற்றினார்.

 

நெல்லை மாவட்ட  அதிமுக அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மேலப்பாளையம் மண்டல சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் குறைந்த அளவில் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கரி நன்றி கூறினார்.