திருப்பூரில் 10 ஊராட்சிகளின் அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகிகள்ஆலோனை: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., திருப்பூர் ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் சார்பாக  பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் கணக்கம்பாளையம் காந்திநகர் உடையார் திருமண மண்டபத்திலும், ஈட்டிவீரம்பாளையம் பெருமாநல்லூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் பெருமாநல்லூர் பிவி திருமண மகால் மற்றும் பட்டம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், சொக்கனூர் ஊராட்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தொரவலூரிலும் நடைபெற்றது.

 இந்த கூட்டத்திற்கு  திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  எம் எஸ் எம் ஆனந்தன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே என் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.


 கூட்டத்தில்,  திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  எம் எஸ் எம் ஆனந்தன் பேசும்போது கூறியதாவது: 

 2011 சட்டமன்ற தேர்தலில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் தேர்தலை சந்தித்தோம். அப்போது புதிதாக இளைஞர்கள் நிறைய பேர் லட்சக்கணக்கான உறுப்பினர்களும் கழகத்தில் இணைந்து கழகப்பணியாற்றினார்கள். அதன் காரணமாக  அன்றைக்கு ஒரு மகத்தான வெற்றி தமிழகத்தில் நாம் பெற முடிந்தது.  2011 சட்டமன்ற தேர்தலில் அதை செய்தது புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.  இன்று  அம்மா அவர்கள் நம்மிடத்தில் இல்லை. இந்த கழகத்தை உருவாக்கிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் நம்மிடத்தில் இல்லை. இன்றைக்கு அம்மா அவர்களுடைய மறைவுக்கு பின்னாலும் அவர்கலுடைய  ஆட்சி சிறப்பாக  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


அண்ணா திமுக ஆட்சியில் தான்  தான் நம்ம திருப்பூர் வடக்குதொகுதியில் பல்வேறு திட்டங்களை நாம் சாதித்து காட்டி இருக்கிறோம். நிறைய திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். 

 இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்று அந்த திட்டத்தை நிறைவேற்றி பணி கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் விவசாய பெருங்குடி மக்களுக்கு  தண்ணீர் பிரச்சனையே இல்லை என்ற நிலை உருவாகும். இதை உருவாக்க காரணமாக இருந்தது  கழகஆட்சிதான்.

இதையெல்லாம் நாம் மக்களிடத்தில் எடுத்துச்சொல்ல வேண்டும் 

குடிதண்ணீர் பிரச்சினை பார்த்து பஞ்சாயத்து தனியா ஒரு ஸ்டீம் போட்டு மேட்டுப்பாளையம் கூடிய விரைவில் எங்கப்பா இருக்க கூடியது 10 பஞ்சாயத்துக்கு மிக விரைவில் அங்கு தண்ணீர் வந்து வரப்போவது ஒவ்வொரு வீட்டுக்கு கனெக்சன் கொடுக்க போறாங்க அந்த நிலையெல்லாம் இன்னைக்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன அதற்கு முழுக்காரணம் அண்ணா திமுக ஆட்சியில் நாம் செய்ய முடிந்தது நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கு அதனாலதான் அந்த திட்டங்களை கொண்டு வர முடிஞ்சது அதனால மீண்டும் அண்ணா திமுக ஆட்சிதான் நாளைக்கு 2020 ல வரணும் வந்தா தான் நம்முடைய திட்டங்கள் இன்னும் என்னென்ன திட்டங்கள் வருங்காலத்தில் புதிய திட்டங்கள் எல்லாம் தேவை பட்டாலும் அதை நிறைவேற்றக்கூடிய ஒரு ஆட்சியாக அண்ணா திமுக ஆட்சியில் செயல்படுத்த முடியும் வேறு எந்த ஆட்சி வந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு எந்த திட்டமும் பெரிய திட்டங்கள் கடந்த காலத்தில் வந்ததே கிடையாது ஆகவே மீண்டும் உருவாக்கி நம்முடைய குடும்பப் பெரியவர்களே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இல்லை நம்முடைய முதல்-அமைச்சர் துறைமுகத்தில் போனதால்தான் இனி வருங்காலத்தில் மேலே சொன்ன கழகத்திற்கு புத்துணர்வு ஊட்டும் அதற்காகத்தான் இந்த பொறுப்பாளர் பணியை தொடங்கி இருக்கிறார்கள் இதன் மூலமாக புதிய இளைஞர்கள் பல்வேறு விதமாக பிரிஞ்சு போய் இருக்காங்க நீங்க கொடுத்த ரசிகர் மன்றம் தெரிந்த விஷயம் என்று தனித்தனியாக பக்கமெல்லாம் கிராமங்களில் இருந்து எல்லா பக்கமும் இந்த இளைஞர்கள் சிதறடிக்கப்பட்டு இருக்கின்றார்கள் இவர்கள் எல்லாம் ஒருங்கிணைத்து இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கக் கூடிய ஒரு இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்று சொல்லக்கூடிய அளவில் அந்த இளைஞர்களை ஈர்க்க வேண்டும் அது யாருடைய வேலை அப்படினா கழகத்திலிருந்து போன்ற மூத்த நிர்வாகிகள் எல்லா பஞ்சாயத்து வந்திருக்கீங்க அஞ்சு பஞ்சாயத்தில் இருந்து இந்த மூத்த நிர்வாகிகள்

 

திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள 10 பஞ்சாயத்துக்கு ஒரு தனி திட்டம் மூலமாக மிக விரைவில்  தண்ணீர் வந்து வரப்போகிறது.  ஒவ்வொரு வீட்டுக்கு கனெக்சன் கொடுக்க போறாங்க . இதன் மூலம் ஊராட்சி மக்களின் தன்ணீர் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வர உள்ளது.  அதனால மீண்டும் கழ்க ஆட்சிதான் நாளைக்கு 2021 ல வர வேண்டும்.   

வேறு எந்த ஆட்சி வந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு எந்த திட்டமும் பெரிய திட்டங்கள் கடந்த காலத்தில் வந்ததே கிடையாது. நம்முடைய முதல்-அமைச்சர் வகுக்கும் வியூகத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும்.  அப்போது தான்,  வருங்காலத்தில் கிராமத்தில் உள்ள   இளைஞர்களை  எல்லாம் ஒருங்கிணைத்து  மிகப்பெரிய பணிகளை நாம் மேற்கொள்ள இயலும். இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கக் கூடிய ஒரு இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்று சொல்லக்கூடிய அளவில்  இளைஞர்களிடம் தெளிவாக எடுத்துரைத்து அவர்களை ஈர்க்க வேண்டும். இந்தப் பணிகளை அனைவரும் சிறப்பாக செய்ய வேண்டும். இன்னும் வருகின்ற எல்லாத்தேர்தல்களிலும் கழகத்தின் வெற்றி உறுதி. இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார். 

 இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மண்டல தலைவர் ஜான், கழகப் பொதுக்குழு உறுப்பினர் பூலுவபட்டி பாலு, இளம் பெண்கள் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எஸ் எம் பழனிச்சாமி, ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாவட்ட கவுன்சிலர் வேல்குமார், சாமிநாதன், கணக்கம்பாளையம் நிர்வாகி சௌந்தர்ராஜன்,  ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா வடிவேல்,  ஈட்டிவுராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சிவசாமி,  பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற து.தலைவர் அய்யாசாமி, நீதிராஜன், ரத்தினகுமார், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்கள் உத்தமேஸ்வரன், செல்வராஜ், கழக நிர்வாகிகள் செந்தில், காளிமுத்து, ராசப்பன், சுந்தரபாண்டியன், அழகாபுரி மணி,திலீபன், யுவராஜ், மணி, ரங்கசாமி, கார்த்தி, அருண், நவீன், காளம்பாளையம் பரமசிவம்,  உட்பட பலர் சமூக இடைவெளி கடைபிடித்து கலந்து கொண்டனர்.உட்பட பலர் சமூக இடைவெளி கடைபிடித்து கலந்து கொண்டனர்.