கலெக்டரிடம் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் மனு

திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன், வெள்ளிக்கிழமை மாலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:
எனது திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக
நிறைவேற்றப்படாமல் உள்ள பொது மக்களின் பிரச்சனைகளை கீழ்கண்டவாறு
பட்டியலிட்டுள்ளேன்.
வார்டு எண்: 44-  ல் பூலவாரி சுகுமாறன் நகர் பகுதியில் குடியிருந்து வருவபர்கள்
குடிசை மாற்று வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டிய
முழுத்தொகையியை செலுத்தி பல வருடங்கள் ஆன நிலையிலும்
அவர்களுக்கான வீட்டுமனை பத்திரம் மற்றும் பட்டா
ஆகியவை இதுவரை வழங்கப்படவில்லை.
பல வருடங்களாக கீழ் கண்ட பகுதியில் நிரந்தரமாக குடியிருந்து வரும் வார்டு எண்: 50. பட்டுக்கோட்டையார் நகர்
வார்டு எண்: 51.அண்ணமார் காலனி, பெரிச்சிபாளையம் காலனி, வார்டு எண்: 42. காட்டு வளவு ஏ.டி., காலனி, வார்டு எண்: 48. மிலிட்டரி காலனி, எம்.ஜி.ஆர்., காலனி, வார்டு எண்: 13. காலேஜ் ரோடு, மாஸ்கோ நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு இதுவரை வீட்டு மனைப் பட்டா வழங்கபடவில்லை.
மேலும், ஒருங்கிணைந்த மாவட்ட பத்திரபதிவு அலுவலகத்தில் தற்போது இயங்கிவரும்
சார்பதிவாளர் அலுவலகம்-|| மற்றும் சார்பதிவாளர் அலுவலகம்
(தொட்டிபாளையம்) ஆகியவற்றை திருப்பூர் தெற்கு பகுதி பொது மக்களின்
வசதிக்காக இட மாற்றம் செய்யப்பட வேண்டும்.
தினசரி மார்க்கட்  (ஸ்மார்ட் சிட்டி) கட்டிட பணிகளுக்கு நடுவில் இடையூராக
உள்ள நுாலக-கட்டிடத்தினை இடமாற்றம் செய்ய வேண்டும். அல்லது
நுாலகத்தினை மேற்கண்ட பணிகள் நிறைவடையும் வரை மாற்று இடத்தில்
இயங்கச் செய்து மீண்டும் புதிய கட்டிடத்திலேயயே இயங்குவதற்கு ஆவண
செய்ய வேண்டும்.
நிறைவடையாமல் நிலுவையில் உள்ள கீழ்கண்ட பணிகளின் மீதான ஆய்வு
கூட்டங்களை நடத்தி,  பணிகளை நிறைவேற்ற வேண்டும்.
1. வஞ்சிபாளையம் ரோடு (சிறு பூலுவப்பட்டி ரிங் ரோடு) ரயில்வே கடவு பாலம், 2. மாநகராட்சி சாலை (எம்.ஜி.ஆர் சிலை அருகில்) சுரங்கப்பாலம்., 3. கொங்கு மெயின் ரோடு (II ரயில்வே கேட்) ரயில்வே கடவு பாலம்., 4. ஊத்துக்குளி மெயின் ரோடு (S.R.C. மில் அருகில்) பாலம், மணியகாரம் பாளையம் மண்ணரை இணைப்பு நொய்யல் பாலத்தின் இரு பகுதிகளிலும் நிறைவேற்றப்படாமல் உள்ள அணுகு சாலை பணிகளை விரைந்து
செயல்படுத்த வேண்டும்.
இத்துடன், வார்டு எண் 56 ஜீவா நகர் குடியிருப்பு பகுதியை நீர் வழி புறம்போக்கு என்பதிலிருந்து வகை மாற்றம் செய்து குடியிருக்கும் அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் பத்திர
பதிவின் மூலம் காலியிட மனைப் பெற்று அவ்விடங்களில் குடியிருப்புகளை அமைத்து பல வருடங்களாக குடியிருந்து வரும், குடியிருப்புவாசிகளுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ள இடங்களின் விபரம்
பின்வருமாறு. வார்டு எண்: 56. கே.வி.ஆர் நகர், அய்யன் நகர், செங்குந்தபுரம், செல்லம் நகர் வார்டு எண்: 34. காஞ்சிநகர், பச்சையப்பா நகர், போயர் காலனி, திருவேங்கடம் நகர். காலேஜ் ரோடு, கொங்கணகிரி பகுதியில் பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி
மாணவ, மாணவியருக்கு மிகவும் இடையூராக உள்ள மதுபானக்கடையை (கடை
எண். 1907) இடமாற்றம் செய்யப்படவேண்டும். கள்ளம்பாளையம் பகுதியில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை
விரிவாக்கம் செய்யப்படவேண்டும். காங்கயம் கிராஸ் ரோடு மற்றும் மங்கலம் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்யப்படவேண்டும். நொய்யல் ஆற்றின் குறுக்கே தேவைப்படும் பாலங்கள்
ஸ்ரீ சக்தி தியேட்டர் மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதியை இணைக்கும் வரை
ஓர் பாலம். ஏ.ஐ.டி.யு.சி., காலனி முதல் மணியகாரம்பாளையம் பகுதியை இணைக்கும் வகையில்
ஓர் பாலம். அமைப்புசாரா தொழிலாளர் வாரிய உறுப்பினர் சேர்ப்பதற்கான முகாம் அமைத்து
தொழிலாளர்களை உறுப்பினர்களாக்க வேண்டும். ஆகவே மேற்கண்ட பொதுமக்களின் பிரச்சணைகளை உடனடியாக பரித்து
என கேட்டுக் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அன்புடன்
கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.