லாரி நிறைய கரும்பு.. ரசித்து ருசித்த காட்டு யானைகள்...டிரைவர்கள் பீதி

தாளவாடி அருகே தமிழக கர்நாடக எல்லையில் போக்குவரத்து பாதிப்பால் நின்றுகொண்டிருந்த கரும்பு லாரியில் காட்டுக்குள் இருந்து வந்த காட்டு யானைகள் கரும்புகளை அலேக்காக அள்ளி தின்றது லாரி ஓட்டுநர்கள், பொதுமக்களை திகில் அடையச் செய்தது.

 

 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள  புளிஞ்சூர் சோதனைச்சாவடி அருகில் கர்நாடக மாநிலத்திலிருந்து தேங்காய் மட்டை ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. இதனால் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதனால், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இந்நிலையில் சாலையில் நின்று கொண்டிருந்த கரும்பு லாரிகளை பார்த்த காட்டு யானைகள் கரும்புகளை சுவைப்பதற்காக சாலையில் வந்து அட்டகாசம் செய்தன. ஒரு யானை லாரியில் இருந்த கரும்புகளை பிடுங்கி ஆசை தீர தின்றது. மேலும் லாரியில் இருந்த கரும்புகளை திண்பதற்காக சாலையிலேயே முகாமிட்டிருந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

Previous Post Next Post