நெல்லை சோதனை சாவடிகளில் பணியில் இருந்த காவலர்களுக்கு மருத்துவ பொருட்கள்

நெல்லை சோதனை சாவடிகளில் பணியில் இருந்த காவலர்களுக்கு மருத்துவ பொருட்கள் வழங்கிய நெல்லை காவல் உதவி ஆணையர்.
நெல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் இரவு நேர பணியில் இருந்த காவலர்களுக்கு கொரனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மருத்துவ பொருட்களை நெல்லை  சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவை சேர்ந்த காவல் உதவி ஆணையர் சேகர் வழங்கினார்.

மருத்துவ பொருட்களான வேப்பிலை , உப்பு, மஞ்சள்தூள் ,துளசி ,மிளகு தூள் போன்ற மருத்துவ பொருட்களை வழங்கி ஆவி பிடிப்பது எவ்வாறு என்பதை கூறினார் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களையும் கொரனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்