சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் தமிழ்நாட்டில் அரசியல் தாக்கம் இருக்கும் -முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா

சசிகலா, சிறையில் இருந்து வெளியே வந்து என்ன முடிவு எடுக்கிறார்களோ அதை பொருத்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் தாக்கம் இருக்கும். என அதிமுக மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளரும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அன்வர் ராஜா கூறியுள்ளார்.

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  வரும் 22 ஆம் தேதி வருவதையொட்டி நடைபெற்ற  ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்   அன்வர் ராஜா செய்தியாளரிடம் கூறியதாவது,

 

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து என்ன முடிவு எடுக்கிறார்களோ அதை பொருத்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் தாக்கம் இருக்கும். எனவும்  இந்தி திணிப்பை அதிமுக அரசு எதிர்க்கும், இரு மொழிக் கொள்கைதான் அதிமுகவின் கொள்கை தமிழ்நாட்டிற்கு தமிழ் கண் போன்றது ஆங்கிலம் கண்ணாடி போன்றது கண்ணும் வேண்டும் கண்ணாடியும் வேண்டும்.  தமிழ் தாய்ப்பால், ஆங்கிலம் புட்டிப்பால், ஆக இரு மொழிக் கொள்கை தான் அதிமுகவின் கொள்கை  என்றும் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுக வின் இரு பெரும் தலைவர்களான O.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் எடுக்கும் முடிவை அதிமுக தொண்டர்கள் கடைபிடிப்பார்கள் எனவும்  கூறினார்