கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்கள் கைது,  42 கிலோ கஞ்சா பறிமுதல்

குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்கள் கைது,  42 கிலோ கஞ்சா பறிமுதல்.சென்னை அடுத்த குரோம்பேட்டை நெமிச்சேரி ஏரிகரை தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் தாமு என்ற வாலிபர். இவர் சேத்துபட்டை சேர்ந்தவர்.


கடந்த 20 வருடங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்தார். இவர் மீது பல வழக்குகள் சேத்துபட்டு காவல் நிலையத்தில் உள்ளதாகவும். இந்நிலையில் ஏரிக்கரை தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகை எடுத்த தாமு கஞ்சாவை பொட்டலமாக தயாரித்துள்ளார்.


இவருடைய எதிர் விட்டில் உள்ள கிஷோர்குமார் என்பவர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர். எனவே இருவரும் சேர்ந்து கஞ்சா பொட்டலங்களை தயாரித்து தொலைபேசி முலமாக வருபவர்களுக்கு வினியோகம் செய்து வந்தனர்.


தகவல் அறிந்த பரங்கிமலை கலால் துறையினர் இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்து வெவ்வேறு பகுதிகளில் சுமார் 42 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.


மேலும் பிடிப்பட்ட இருவரையும் சிட்லப்பாக்கம் காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர  விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.