பழனியில் தந்தை பெரியாரின் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து கட்சிகள் சார்பாக திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பழனியில் தந்தை பெரியாரின் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து கட்சிகள் சார்பாக திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 


 

பழனியில்  தந்தைப் பெரியாரின் 142 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து கட்சிகள் சார்பாக பேருந்து நிலையத்திலிருந்து ரயிலடிச் சாலையில் உள்ள  தந்தை பெரியாரின் சிலை வரை தந்தை பெரியார் படம் பொறித்த பதாகைகள் மற்றும் தந்தை பெரியார் வாசகங்கள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடைபயணமாக பெரியார் நினைவைப் போற்றும் வகையில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலம் நடைபெற்றது.

 


 

இந்த ஊர்வலம் பெரியார் சிலையில் முடிவுற்ற நிலையில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,அதிமுகட்சி, இந்திய குடியரசு கட்சி, இந்திய காங்கிரஸ் பேரியக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,தேமுதிகட்சி,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி,எஸ்டிபிஐ கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி,தமுமுகட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு,உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்க தொண்டர்கள் ஒன்றாக இணைந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 

விழாவின் இறுதியில் ஆதி தமிழர் கட்சியின் சார்பாக அனைத்து கட்சி தொண்டர்களுக்கும் மாட்டுக்கறி அடங்கிய உணவு பொட்டலங்களை வழங்கி சிறப்பித்தனர். மாட்டுக்கறி விருந்தில் அனைத்து கட்சி தோழர்களும் கலந்து கொண்டு உணவு பொட்டலங்களை பெற்றுச் சென்றனர்.