தாளவாடி அடுத்த திம்பம் கொண்டை ஊசி வளைவுகளில் நிலச்சரிவு... உடனடியாக சீரமைத்து தர வாகன ஓட்டிகள் கோரிக்கை


 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பாதையில் பெய்த கனமழையால் கொண்டை ஊசி வளைவுகளில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

 


 

நிலச்சரிவால் சாலையில் கற்கள்,மண் சரிந்துள்ளது.மேலும் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு பல நாட்கள் ஆகியும் இன்னும் சீரமைக்கப்படாததால் கனரக வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.இந்த மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் கனரக போக்குவரத்து வாகனங்களும், பேருந்துகளும் இயக்கப்படுவதால் நிலச்சரிவு ஏற்பட்ட கொண்டை ஊசி வளைவுகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.