தாளவாடி பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் தொல்லை... நடவடிக்கை எடுக்குமா வனத்துறை


 

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மானாவாரி விவசாயம் அதிகமாக செய்யப்படுகிறது. மக்காச்சோளம்,ராகி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இரவு நேரங்களில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று சேதம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் நுழைவதை தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

படம்:தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சிக்ககாஜனூரில் பசேவகவுடா என்பவரது விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் சேதம் செய்த பயிர்கள்.