நெல்லையில் அதிமுகவில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர்


திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில்

அதிமுகவில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர்

 


 

 திருநெல்வேலி மாநகர்  அமமுக 4வது வட்ட அம்மா பேரவை செயலாளர் சத்யா முருகன், வட்ட இளைஞரணி செயலாளர் பழனி சுப்பையா ஆகியோர் தலைமையில் அமமுகவைச் சேர்ந்த 50 பேர் அக்கட்சியிலிருந்து விலகி  அதிமுக திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

 

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப் ஜான், மாவட்ட மாணவரணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்  சவுந்தரராஜன், பகுதி கழக செயலாளர்கள் ஹயாத், மோகன், ஜோதிபுரம் சுப்புராம், எஸ் கே எம் சிவகுமார், மேலப்பாளையம் பகுதி துணைச்செயலாளர்  ரசாக், பகுதி பொருளாளர் முகம்மது அலி, பாளையங்கோட்டை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், தச்சை பகுதி அம்மா பேரவை செயலாளர் மேகை சக்திகுமார், 4வது வட்ட கழக செயலாளர் பால்ராஜ், வழக்கறிஞர்கள் சிந்து முருகன், வைரமுத்து, கண்ணன், சற்குணம், சித்தா அசோகன், டொமினிக் பாண்டி உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.