செயினை பறித்து விட்டு ஆசிரியையை ஆட்டோவிலிருந்து தள்ளிய கொடூரம்: இருவர் கைது


பல்லாவரம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் அணிந்திருந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்து விட்டு ஆட்டோவில் இருந்து கிழே தள்ளிய பெண் உட்பட இருவரை பொதுமக்கள் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.


சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (45). ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளி ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.


வழக்கம் போல் இன்று பணிக்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். பம்மல் புற்று கோவில் சாலையில் அவரின் அருகே உட்கார்ந்திருந்த மற்றொரு பெண், திடீரென சரஸ்வதி அணிந்திருந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்து ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி உள்ளார்.


இதில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் இதனை கண்ட பொது மக்கள் வேகாம சென்ற ஆட்டோவை மடக்கி பிடித்து இருவருக்கும் தர்ம அடிகொடுத்து சஙகர் நகர் போலிசாரிடம் ஒப்படைத்தனர் .


போலிசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாங்காட்டை சேர்ந்த  ஆட்டோ ஓட்டுனர் பிரசாந்த(26) என்பதும் அவருடன் இருந்த பெண் கணவரை பிரிந்து நான்கு மாதமாக நிரந்திர முகவரி இல்லாமல் இருக்கும்  அமலோப்பர ரோஸ்மேரி (23) என்பதும் தெரிய வந்துள்ளது.


இதனையடுத்து அவர்களிடம் தீவிர விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.