மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 613கிலோ எடை கொண்ட கோயில் மணி

மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 613கிலோ எடை கொண்ட கோயில் மணி ஒன்று ராமேஸ்வரத்தில் பூஜை செய்யப்பட்டு  அயோத்திக்கு புறப்பட்டது. 

 


 

பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாளை நாடு முழுவதும் பலர் கொண்டாடி வரும் நிலையில்,  சென்னையை சேர்ந்த ராஜலெட்சுமி மண்டா என்ற பெண்  613கிலோ எடை கொண்ட கோயில் மணி ஒன்றை ராமேஸ்வரத்தில் பூஜை செய்யப்பட்டு லாரி மூலம்  அயோத்திக்கு புறப்பட்டார்., 

 

இன்று புறப்படும் வாகனம்   21 நாட்கள் 4552 கிலோ மீட்டர் என  11  மாநிலங்களை கடந்து அடுத்த மாதம் 7ம் தேதி அயோத்திக்குச் சென்றடையவுள்ளது. இந்த வாகனத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.