பாலூர் ஊராட்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் வீதி வீதியாக கபசுர குடிநீர்


வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலமாக பொதுமக்கள் அனைவருக்கும் வீதி வீதியாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டன. பெரியவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கபசுர குடிநீர் வாங்கி அருந்தினர்.துப்புரவு பணியாளர் திரு. விஜயகுமார் அவர்கள் கபசுர குடிநீரின் முக்கியத்துவத்தை மக்களிடத்தில் எடுத்துரைத்தார்.