ஆம்பூர் அருகே மர்மமான முறையில் அடிபட்டு இறந்த மயில்
ஆம்பூர் அருகே மர்மமான முறையில் அடிபட்டு இறந்த மயில். உடற்கூறு ஆய்வு செய்து எரித்த வனத்துறையினர்.

 


 

ஆம்பூர் வனச்சரக காப்பு காடுகளில் அண்மைக்காலமாக மயில்களின் நடமாட்டம் அதிகரித்து  வருகிறது. வனப்பகுதிகளில் மட்டுமல்லாது விவசாய நிலங்களிலும், மாந்தோப்புகள் மற்றும் தென்னந்தோப்புகளில் உள்ளிட்ட பகுதிகளிலும் மயில்களின் நடமாட்டம் இப்போது அதிகரித்து வருகிறது.

 

ஆம்பூர் அருகே  மிட்டாளம் ஊராட்சியில் உள்ளது பைரப்பள்ளி.இந்த ஊரை ஒட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் அருகே மேர்லமிட்டா ஏரி கானாறு உள்ளது. இந்த கானாற்று பகுதியில் இன்று காயம்பட்ட நிலையில் ஒரு ஆண் மயில் உயிருக்கு போராடிய நிலையில்  இருந்தது.

 


 

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் வனச்சரகர் மூர்த்திக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வனச்சரகர் ( பயிற்சி) சுரேஷ்குமார் , வனக்காப்பாளர்கள் ராஜ்குமார் , கணேசன், மகேஷ் , ஞானவேல் ஆகியோர் வந்து ஆண் மயிலை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அந்த ஆண் மயில் உயிரிழந்தது.

 

பின்னர் அடிப்பட்ட ஆண் மயிலை கால்நடை மருத்துவர் பாண்டியன்  உடற்கூறு ஆய்வு செய்தார். பின்னர் இறந்த மயிலை கம்பிக்கொல்லை வனப்பகுதியில் எரித்தனர்.