குப்பை கிடங்கை அகற்றக் கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு




மக்கள் நீதி மய்யம் ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பொதுமக்களுக்கு ஊறுவிளைவிக்கும் குப்பை கிடங்கை அகற்றக் கோரி மாவட்டச் செயலாளர் ஜி.எல்.எம். சிவக்குமார் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தினர் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர்.

 


 

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

 

நான் மக்கள் நீதி மய்யத்தின் ஈரோடு வட கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் மையப்பகுதியில் பால வித்யாலயா ஆரம்ப பாட சாலை அமைந்துள்ளது. தற்போது பள்ளி செயல்படுவதில்லை. இந்த இடத்தில் நகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டும் கிடங்காக நகராட்சி மாற்றியுள்ளது. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குப்பைக்கிடங்கிற்கு அருகில் யோகா மையம், விநாயகர் கோயில், அம்மன் கோயில், லில்லிபுட் சிறுவர் பள்ளி, நியாயவிலைக்கடை மற்றும் மின்வாரிய அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளது.

 

குப்பை கிடங்கில் துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மழைநீர் தேங்குவதால் உருவாகும் கொசுக்களால் மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவுகிறது மழைக்காலங்களில் இது பன்மடங்கு உயர்கிறது. விஷ ஜந்துக்களின் புகலிடமாக இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளரிடம் விண்ணப்பம் செய்து முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை ஆகவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

 

இந்நிகழ்வில் கோபி நகரச் செயலாளர் ஜி.சி. சிவக்குமார் கோபி ஒன்றிய செயலாளர் என்.கே. பிரகாஷ் மாவட்ட மகளிரணி சுதா செல்வராஜ் கோபி நகரம் என்.கே. சக்தி ஆகியோர் உடனிருந்தனர்


 

 




Previous Post Next Post