பரமக்குடியில் போலீஸ் வாகனத்தை தாக்கிய நால்வர் கைது

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் போலீசார் சென்ற வாகனத்தை தாக்கிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடையை மீறி மீறி அஞ்சலி செலுத்திய 13 அமைப்புகள் மற்றும் ஆறு கிராமங்களைச் சேர்ந்த நபர்கள் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரனின் 63 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் தடையை மீறி இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்,

 

மேலும் போலீசார் சென்ற வாகனத்தை தாக்கிய சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியவர்களை தேடிவந்தனர்.

 

இந்நிலையில் போலீசார் சென்ற வாகனத்தை தாக்கியதாக 30 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் சிவகங்கையைச் சேர்ந்த ராமர்,சண்முகபாண்டியன்,மணிகண்டன்,  பரத்குமார் ஆகிய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மீதமுள்ள 27 நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர், மேலும் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி பெறாமல் வந்த 140 நான்கு சக்கர வாகனங்கள், 60 இருசக்கர வாகனங்கள், 13 அமைப்புகள் மற்றும் ஆறு கிராமங்களைச் சேர்ந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

 

மேலும் இமானுவேல் சேகரன் நினைவு தின அஞ்சலிக்கு தடையை மீறியதாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விதி மீறலில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் வகையில் வீடியோ பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.