இராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்... நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
தமிழக அரசின் தளர்வுகளையடுத்து இராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

 


 

கொரோனா வைரஸின்  தாக்கம்  இருந்து வந்தாலும் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு அண்மையில் பல தளர்வுகளை அறிவித்தது.,  இதனையடுத்து   வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்., ராமேஸ்வரத்தின் முக்கிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் குவிந்துள்ளனர்.,  மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் தீர்த்தம் நீராடுவதற்கும்,  அக்னி தீர்த்த கடற்கரையில் குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் மட்டுமே செய்து வருகின்றனர் கோயிலின் நுழைவுப்பகுதியில் காவல்துறையினரும் கோயில் ஊழியர்களும் பக்தர்களுக்கு முறையான பரிசோதனை செய்யப்பட்டும்,  தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கப் படுகின்றார்கள்.