சேலம் அம்மாபேட்டை ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் ஆவணிமாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு
 

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் ஆவணிமாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ காளியம்மனுக்கு முகத்திற்கு விசேஷ அலங்காரம் மற்றும்கற்கள் பதித்த நகை ஆபரணங்கள் நறுமண மலர் மாலைகள் சூட்டி சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர்.

 


 

கோவில் நடைதிறப்பு  செய்ததை முன்னிட்டு உலக மக்கள் அனைவரும் கொரோனோ நோய்தொற்றிலிருந்து  மீண்டு வர பல்வேறு விதமான இசை வாத்தியங்கள் முழங்க  சிறப்பு பூஜை செய்யப்பட்டு உதிரிபூக்கள் அர்ச்சனை செய்யப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தி மற்றும் கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது இந்நிகழ்வில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி மோகன் குமார் எழுத்தர் ஸ்ரீதர் திருக்கோவில் அர்ச்சகர்கள் ரங்கநாதன் வெங்கட்ராமன் ஈஸ்வரி ராஜசேகர் ஆகியோர் சிறப்பாக பூஜை செய்து பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் பூ பிரசாதங்களை கையுறை அணிந்து வழங்கினர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மனை தரிசனம் செய்தனர்