செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜக மாநில SC அணி பொருளாளர், தொழிலதிபர் PPGD.சங்கர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

 


 

உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் நரேந்திர மோடியின் நல்லாட்சினால் ஈர்க்கப்பட்டு தமிழ்நாட்டில் வீர நடை போட்டு கொத்துக் கொத்தாய் பாஜகவில் மக்களை உறுப்பினர்களாக இணைத்து வரும் பாஜக மாநில தலைவர் எல். முருகனின் பற்றுதலினால் இன்று செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் இருந்து V.வினோத் அவர்களின் ஏற்பாட்டில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  படப்பை ஸ்ரீ ஏ.நாகராஜன் அவர்களின் தலைமையில்  மாநில SC அணி பொருளாளர் தொழிலதிபர் PPGD.சங்கர் அவர்களின் முன்னிலையில் இணைந்தனர்.

 

 இந்நிகழ்ச்சியில் தமிழக முதல் முதல்வர் குமாரசாமி ராஜா அவர்களின் பேத்தி திருமதி ஜெயந்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

 மேலும் காஞ்சி மாவட்ட துணைத்தலைவர் ஓம்சக்தி M.செல்வமணி காஞ்சி மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் பாஜகவில் புதிதாக இணைந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

  பாஜகவில் இணைந்த அனைவருக்கும் மாநில SC அணி பொருளாளர் PPGD சங்கர் மற்றும் முதல் முதலமைச்சர் அவர்களின் பேத்தி ஜெயந்தி ஆகியோர் சால்வை அணிவித்து பாஜகவிற்கு வரவேற்றனர்.

 

 இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய துணைதலைவர் மணிமாறன், சமூக ஊடக மாவட்ட பொருப்பாளர் R.கார்த்திக், நகர SC அணி தலைவர்  P.ஜெயக்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.