குற்றாலம் மலைப்பகுதியில் மழை அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பு


 

குற்றாலம் மலைப்பகுதிகளில்  பெய்யும்  தொடர் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும் இந்த ஆண்டும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வழக்கம்போல் சாரல் மழை பெய்த நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது.  பலமுறை வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. நாடு முழுவதும் கொரோணா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலில் உள்ளதால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில்  குற்றாலம் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி, அருவி தேனருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் குற்றாலத்தில் வெயில் இல்லை. மேலும் குற்றாலத்தில் குளிர்ந்த இதமான சூழ்நிலை நிலவுகிறது.

 

அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் அருவிப் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

 

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை, ராமநதி அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணை, அடவிநயினார் அணை அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் செங்கோட்டை குண்டாறு அணை மேக்கரை அடவிநயினார் அணை ஆகிய அணைகள் நிரம்பி தண்ணீர் வழிகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன்  தங்கள் பணிகளை துவங்க தயாராகி வருகிறார்கள்.

 

 

 

Previous Post Next Post