தாளவாடியில் கனமழை: தரைப்பாலம் மூழ்கியது

தாளவாடியில் பெய்த கன மழையால் தரை பாலத்தை மழைநீர் மூழ்கடித்து சென்றது. இதனால் கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.


 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மெட்டலவாடி மற்றும் சுற்று வட்டாரபகுதியில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் தொட்டகாஜனூர் கிராமத்தில் இருந்து மெட்டலவாடி கிராமத்திற்க்கு செல்லும் சாலையில் உள்ள தரை பாலத்தை மழைநீர் மூழ்கடித்து சென்றது.இதனால் இரண்டு கிராமங்களுக்கு  இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தரைப்பாலத்தில் சென்ற மழைநீரின் அளவு குறைந்தவுடன் போக்குவரத்து சீரானது.