சினிமா தியேட்டர்கள் எப்போ திறப்பாங்க.. அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

திரைதுறையினருடன் சென்று முதல்வரை சந்திக்கிறோம் அந்த நேரத்தில் விரைவில் திரையரங்கு திறப்பது குறித்து நல்ல முடிவு வரும் - ஓட்டப்பிடாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.


கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனாரின் 149 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அவரது பிறந்த இல்லத்தில் உள்ள வ.உ.சி முழு உருவ சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


 செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு விடம் நமது புகைப்படக்காரர் சாதிக் கான் ஆயுத எழுத்து புத்தகத்தை வழங்கினார்


----------------------------------++++-----------------


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்:


வ உ சிதம்பரனார் நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டார். இவர் வெள்ளையர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவினார். தொடர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியதற்காக ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் செக்கிழுத்தார் என அவருக்கு புகழாரம் சூட்டினார் தொடர்ந்து பேசியவர் அவனுடைய புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஓட்டப்பிடாரத்தில் அவரது நினைவாக நீதிமன்றம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படும் என்று அவர் கூறினார்.


கொரானா தடுப்பு வகையில் ஊரடங்கு தளர்வுகளில் தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார். ஊரடங்கு நடவடிக்கைகள் அனைத்துமே உலக சுகாதார மையத்தின் வழிகாட்டல்களையும் மேற்கோள் காட்டி மத்திய அரசு கூறுகின்ற மத்திய அரசு சொல்லுகின்ற வழி காட்டுதல்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன என்றார். 


மத்தியிலும் நாங்கள் தான் ராஜா தமிழகத்திலும் நாங்கள் தான் ராஜா என முன்னாள் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளது குறித்து அதற்கு பதிலளித்த அமைச்சர் அவர் பெயரில் ராஜா என்று இருப்பதனால் அவர் கூறி இருக்கலாம் என நகைச்சுவையாக குறிப்பிட்டார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்தும் சசிகலா விரைவில் விடுதலையாகி வருவது குறித்தும் செய்தியாளர்கள் கேட்டதற்கு முதலில் அவர்கள் வரட்டும் பார்க்கலாம் என்றார்.


உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், வ.உ.சி வாரிசு செல்வி உள்ளிட்டவர்கள் இருந்தனர்.