கழுதூர் ஓடையில் மழைநீர் நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சி ஓடைபகுதியில் தடுப்பணை ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் கட்டப்பட்டது.

 

நேற்று திட்டக்குடி பகுதி முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது இதனால் ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

 

இதனை அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மாணவர்கள் ஆச்சர்யத்துடன்  கண்டு ரசித்தனர்.

 

தகவலறிந்து வந்த மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ஆர் சங்கர்,தண்டபாணி,ஊராட்சி மன்றதலைவர்கருணாநிதி ஆகியோர் நேரில் சென்று பார்த்து ரசித்தனர்.

 

மேலும் தடுப்பணை அமைத்துக்கொடுத்த அரசுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்க்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.